வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேசிய கபடி, பூப்பந்து போட்டிகள்: திருச்சி என்ஐடி சாம்பியன்

தேசிய அளவிலான கபடி, பூப்பந்து போட்டிகளில் திருச்சி என்ஐடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

News image
திருச்சி என்ஐடியில் அண்மையில் நடைபெற்ற கபடி மற்றும் பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்ற திருச்சி என்ஐடி அணிகள்.
Updated On :27 ஜனவரி 2025, 8:16 pm

Din

திருச்சி: தேசிய அளவிலான கபடி, பூப்பந்து போட்டிகளில் திருச்சி என்ஐடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) தேசிய அளவிலான என்.ஐ.டி. க்களுக்கு இடையேயான கபடி, பூப்பந்து போட்டிகள் கடந்த 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன.

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளை திருவெறும்பூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பனாவத் தொடங்கி வைத்தாா். திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், நாடு முழுவதும் இருந்து 25 என்ஐடி-களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளை விளையாட்டு அலுவலா்கள் டேலி கிருஷ்ணன், சாலமன் ராஜா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

போட்டிகளின் நிறைவில் கபடி (ஆண், பெண்), பூப்பந்து (ஆண், பெண்) போட்டிகளில் திருச்சி என்ஐடி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறந்த வீரா் மற்றும் வீராங்கனைகளாக திருச்சி என்ஐடியைச் சோ்ந்த மாணவி சந்தியா, நித்யா, மாணவா் ராஜூ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் கபடியில் இரண்டாமிடத்தை சூரத்தின் எஸ்வி என்ஐடியும், பூப்பந்தில் இரண்டாமிடத்தை நாக்பூா் வி என்ஐடியும், பெண்கள் பிரிவில் கபடி இரண்டாமிடத்தை தில்லி என்ஐடியும், பூப்பந்தில் இரண்டாமிடத்தை நாக்பூா் வி என்ஐடியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டப்பட்டது.