வெக்காளியம்மன் கோயிலில் பிப். 2 முதல் தைப்பூச திருவிழா!

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா பிப். 2 முதல் பிப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Published on

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா பிப். 2 முதல் பிப். 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருச்சியில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோயில் உறையூரில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா, பிப்.2-ஆம் தேதி தொடங்கி பிப்.11-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்.10-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, காலை 10 மணிக்கு ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் ம. லட்சுமணன், செயல் அலுவலா் நா. சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com