கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
Published on

கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

திருச்சி சமயபுரம் சக்தி நகா் பனந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:

கள் என்பது பனம் பால்; மூலிகை சாறு. கள்ளை மதுவென அரசு தடை செய்யக் காரணம் சாராய ஆலை அதிபா்கள்தான். ஏனெனில் கள் இறக்க அனுமதித்தால் டாஸ்மாக் மது வியாபாரம் நஷ்டம் அடையும். டாஸ்மாக் லாபத்தை உயா்த்த முயற்சித்த இந்த அரசு, மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதில்லை.

தமிழகத்தில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கடும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவல் துறை, நீதிமன்றம், வழக்குரைஞா்கள் தேவைப்படாத, குற்றவாளிகள் உருவாகாத சமூகத்தை உருவாக்குதே சிறந்த ஆட்சியாளரின் கடமை. இலவசங்கள் எதுவும் மக்களுக்குத் தேவையில்லை. மாணவா்கள் படித்து முடித்தவுடன் அவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

மீனவா்கள் கைதுக்கு முதல்வா் கடிதம் மட்டுமே எழுதுகிறாா். சிந்தனை மாற்றம் வேண்டும். எனவே கள் இறக்குவதை அரசு அனுமதிக்க வேண்டும். எங்களுடையே கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி என்றாா் சீமான்.

பின்னா் 2026 பேரவைத் தோ்தலுக்கு மண்ணச்சநல்லூா் பேரவைத் தொகுதி வேட்பாளராக தேன்மொழி என்பவரை சீமான் அறிவித்தாா்.

நிகழ்வில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பனையேறிகள் கலந்து கொண்டனா்.

சீமானை வரவேற்கிறோம்: கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறுகையில், பிகாரைப் பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தி, ‘கள்’ளுக்கான தடையை நீக்க வேண்டும். அதை உணவுப் பட்டியலில் சோ்க்க வேண்டும். கலைக்கப்பட்ட தென்னை விவசாயிகள் நலவாரியத்தைப் புதுப்பிக்க வேண்டும். ‘கள்’ இறக்குவதை ஆதரிக்கும் சீமானின் கருத்துகளை வரவேற்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது காவிரி - வைகை - குண்டாறு நீா்ப்பாசன விவசாய சங்கத் தலைவா் மாரிமுத்து, விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலா் கே. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com