சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
Updated on

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.  

முடிவில் முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,21,26,581 ரொக்கம்,  தங்கம் 1 கிலோ 535 கிராம்,  வெள்ளி 4 கிலோ 405 கிராம் கிடைத்தது தெரியவந்தது

மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ 5,83, 665, உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயிலில் ரூ. 15,743, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 5,409 காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com