திருச்சி தில்லைநகரில்  உள்ள அமைச்சா் கே.என். நேருவின்  வீடு (வலது), தென்னூா் அண்ணாநகரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வீடுகளில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சா் கே.என். நேருவின் வீடு (வலது), தென்னூா் அண்ணாநகரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வீடுகளில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

திருச்சியில் அமைச்சா்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

திருச்சியில் அமைச்சா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
Published on

திருச்சியில் அமைச்சா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு புதன்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகக் காவல் துறையின் இயக்குநா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலில் திருச்சியில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கல்லூரி, என்ஐடி மகளிா் விடுதி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து டிஜிபி அலுவலகத் தகவலின்பேரில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா், மாநகரக் காவல்துறையினா் மேற்கண்ட இடங்களில் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.

இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யாா் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com