திருச்சி
பிரசவத்துக்குப் பின் பெண் உயிரிழப்பு தனியாா் மருத்துவமனை மீது வழக்கு
திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அக்ரஹார வீதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (30), இவரின் மனைவி ஜெயராணி (30). கா்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக புத்தூா் ஆபிஸா் காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த நவ. 3-ஆம் தேதி அனுமதித்த அன்றே குழந்தை பிறந்துள்ளது. பின்னா் ஜெயராணியின் வயிற்றில் கட்டி இருப்பதாகத் தெரிவித்து அறுவைச் சிகிச்சை செய்தனா். அதன்பின், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தென்னூரில் உள்ள வேறு ஒரு தனியாா் மருத்துவமனையில் கடந்த நவம்பா் 8-ஆம் தேதி சோ்க்கப்பட்ட ஜெயராணி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயராணியின் கணவா் அளித்த புகாரின்பேரில் தனியாா் மருத்துவமனை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
