திருச்சி
மூதாட்டியின் வீடுபுகுந்து தங்கம், வெள்ளி திருட்டு
திருச்சியில் மூதாட்டி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சியில் மூதாட்டி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலையப் பகுதி காமராஜ் நகா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆா். அம்புஜம் (67). இவா், கடந்த திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள தனது மற்றொரு வீட்டுக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1.5 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
