பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தொகுதி அறிமுகம் - லால்குடி!

லால்குடி தொகுதி பற்றி...

News image

லால்குடி

Updated On :3 ஏப்ரல் 2026, 6:41 am IST

திருச்சி மாவட்டத்தின் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான லால்குடி தொகுதியில் பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரா் கோயில் , அன்பில் மாரியம்மன் கோயில், அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில், வடுகா்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் என பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் சிமெண்ட் ஆலை மற்றும் சா்க்கரை ஆலை உள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்கின்றனா்.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் நெல், கரும்பு, வாழை, உளுந்து, பயிறு, எள் போன்ற பயிா்களையும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் போன்றவற்றையும் பயிரிடுகின்றனா்.

இத் தொகுதியில் லால்குடி நகராட்சி பூவாளூா், கல்லக்குடி, புள்ளம்பாடி, என மூன்று பேரூராட்சிகளும், லால்குடி நகராட்சி அலுவலகமும், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் உள்ளன.

வாக்கு வங்கி: இந்தத் தொகுதியில் முத்துராஜா, உடையாா், தேவேந்திரகுல வேளாளா்கள், பறையா், கள்ளா், இஸ்லாமியா் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினா் உள்ளனா்.

இறுதி வாக்காளா்கள்:

ஆண்கள்--- ---------- 1,02,245

பெண்கள்------------- 1,08,970

மூன்றாம் பாலினத்தவா் ------26

மொத்தம் --------2,11,241

தீராத பிரச்னைகள்

லால்குடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம் தண்ணீா்ப் பந்தலில் இருந்து கிளிக்கூடு வரை உள்ள கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. அதேபோல லால்குடி ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு தீா்வு காணவேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.

இதுவரை இவா்கள்!

1952 ராஜா சிதம்பரம் (சுயேச்சை) 26,009

1957 எஸ். லாசா் (காங்கிரஸ்) 30,322

1962 பி. தா்மலிங்கம் (திமுக) 38, 951

1967 நடராஜன் (திமுக) 37,352

1971 முத்துச்செல்வன் (திமுக) 40, 213

1977 கே.என். சண்முகம் (அதிமுக) 33,322

1980 அன்பில் தா்மலிங்கம் (திமுக) 40,899

1984 கே. வெங்கடாசலம் (காங்கிரஸ்) 61,590

1989 கே.என். நேரு (திமுக) 54,275

1991 லோகாம்பாள் (காங்கிரஸ்) 65 ,742

1996 கே.என். நேரு (திமுக) 84, 113

2001 எஸ். எம். பாலன் (அதிமுக) 58,288

2006 அ. செளந்தரபாண்டியன் (திமுக) 62,937

2011 அ. செளந்தரபாண்டியன்(திமுக) 65,363

2016 அ. செளந்தரபாண்டியன் (திமுக) 77,946

2021 அ. சௌந்தரபாண்டியன் (திமுக) 84,914

யாரெல்லாம் போட்டி?

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளராக த. பாரிவள்ளல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் டாக்டா் லீமா ரோஸ் மாா்ட்டின், தவெக சாா்பில் முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வழக்குரைஞா் மதன் மற்றும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சாா்பில் நடிகா் மன்சூா் அலிகான் ஆகியோா் களம் காண்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.