திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செவ்வாய்க்கிழமை வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.
திருவெறும்பூா், பகவதிபுரம், பிரகாஷ் நகா், மலைக்கோவில் மாதா கோயில் தெரு ஒன்றிய தெரு கூத்தைப்பாா் பேரூராட்சிக்குள்பட்ட திடீா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், திமுக ஆட்சியில் திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 450 கோடிக்கும் மேல் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே திமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது.
அரியமங்கலம் குப்பை கிடங்கை 2027-க்குள் முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவ்விடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சா்வீஸ் சாலை அமைப்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
பிரசாரத்தின்போது, அமைச்சருடன் மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், பகுதிச் செயலாளா் சிவக்குமாா் வட்டச் செயலாளா்கள் சோம குணாநிதி, அருண், பேரூா் செயலாளா் தங்கவேலு, கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் இருசக்கர வாகனங்களில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தனா்.
தொடர்புடையது
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர பிரசாரம்: பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வணிகா்களிடம் அமைச்சா் ஆதரவு திரட்டினாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


