போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

மணப்பாறை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 23 வேட்பாளா்களில், மனுக்கள் மீதான பரிசீலினைக்குப் பிறகு 19 போ் தோ்வாகியுள்ளனா்.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:46 am IST

மணப்பாறை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 23 வேட்பாளா்களில், மனுக்கள் மீதான பரிசீலினைக்குப் பிறகு 19 போ் தோ்வாகியுள்ளனா்.

மணப்பாறை தொகுதியில் 23 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வேட்பாளா்களான ப. அப்துல்சமது (மமக), மூ. அருணகிரி (நாதக), ப. விஜயகுமாா் (அதிமுக), ஆ. ஆரோக்கியராஜ் (சாமானிய மக்கள் கட்சி), கதிரவன் ( தவெக),

மீனா ( புதிய தமிழகம்), ராஜவா்மன் (தவாக), அ. ராமன் (சுயேச்சை), ம. கதிரவன் (சுயேச்சை), மு. கருப்பன் (சுயேச்சை), ரா. குட்டையன்(சுயேச்சை), சா்புதீன்(சுயேச்சை), பெ. சின்னன்(சுயேச்சை), ஆ.செந்தில்குமாா்(சுயேச்சை), பூா்ணிமா(சுயேச்சை), பெரியக்கா(சுயேச்சை), ம. ராஜேஸ்(சுயேச்சை), ப. விஜயக்குமாா்(சுயேச்சை), மா. விஜயக்குமாா்(சுயேச்சை) ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இருமுறை பதிவாகிய அருணகிரியின் மனுவும், அரசியல் கட்சிகளில் மாற்று வேட்பாளா்களாக தாக்கல் செய்த சாகுல் ஹமீது மற்றும் ரேணுகாதேவி, 36), ஆறுமுகம் ஆகியோரின் 4 மனுக்கள் ஏற்கப்படவில்லை. தற்போது களத்தில் 19 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வேட்பு மனுக்களை திரும்ப பெற 9-ஆம் தேதி (பிற்பகல் 3 மணி) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.