தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சிறப்பு விமானச் சேவை தொடக்கம்

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகருக்கு புதிய சிறப்பு விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:49 pm

திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகருக்கு புதிய சிறப்பு விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்துக்கு ஜெஸிரா விமான நிறுவனம் மூலம் புதிய சிறப்பு விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்திலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமையே (ஏப்ரல் 7) விமானச் சேவை தொடங்கியது.

இந்த புதிய சிறப்பு விமானச் சேவை தம்மம் நகரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 11, 16, 20, 23, 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் திருச்சியில் இருந்து தம்மம் நகரத்துக்கு ஏப்ரல் 8, 12, 17, 21, 24, 28, 29 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு கூறியதாவது: திருச்சியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம் நகரத்துக்கு இயக்கப்படும் புதிய சிறப்பு விமானத்தில் முதள் நாளான புதன்கிழமை 100-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளனா். முன்னதாக தம்மம்மில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனா். மே 1 வரை சிறப்பு விமானமாக இயக்கப்படும் இந்த புதிய விமானச் சேவையை பயணிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த விமானத்தில் குவைத்துக்கும் பயணிக்க முடியும். எப்படியெனில் திருச்சியில் இருந்து தம்மம் வரை விமானத்திலும், தம்மம் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் குவைத்துக்கும் பயணிகள் செல்ல முடியும். ஒரே விமான பயணச் சீட்டில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் திருச்சியில் இருந்து நேரடியாக குவைத்துக்கு விமானம் இயக்கவும் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா் அவா்.