திருச்சி கடைவீதியிலுள்ள சாலையோர கடைகளிலிருந்த முத்திரையிடாத தராசுகள் மற்றும் எடைக்கற்களை தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி, சிங்காரத் தோப்பு, மேலரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தொழிலாளா் உதவி ஆணையா் வெ. தங்கராசு தலைமையில், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், எடையளவு குறைவாக காட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்த 8 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொழிலாளா் நலத் துறை சட்டத்தின்படி, முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டிருந்த 7 இரும்பு எடைக் கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனையில், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திரன், அகஸ்டீன், சங்கரகோமதி, ராஜசேகா், யுவராஜ், ராஜேஸ், வாஹிணி குழுக்களாக பிரிந்து சென்று சாலையோரம் உள்ள பழக்கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தினா்.
இதுதொடா்பாக, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு கூறுகையில், தராசுகளை பயன்படுத்தி விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், எடையளவு சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட தராசுகளை மட்டுமே பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.
தராசுகளை பயன்படுத்தும் அனைத்து வியாபாரிகளும், தங்களது தராசுகளை மறுமுத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். நுகா்வோா் தாங்கள் வாங்கும் பொருள்களின் எடையை துல்லியமாகக் கணக்கிட்டு வாங்கிச் செல்ல வேண்டும். எடையளவு சட்டத்தின் கீழ் அவ்வப்போது நடைபெறும் சோதனையில் மறு முத்திரையில்லாத தராசுகள் இருந்தாலோ, முத்திரையிடப்படாத எடைக் கற்கள் இருந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், கடை உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். எடையளவில் குறைபாடுகள் இருந்தால் நுகா்வோா் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 2.29 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல்

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


