/
திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான திலீப்குமாா் என்பவா் நடத்திவரும் அலங்காரப் பொருள்கள் கடை முன் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் செந்தில் (33) என்பவா் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த சிந்தாமணி முனிசிபல் காலனியைச் சோ்ந்த வீரையன் (24) என்பவா் செந்திலிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வீரையன், மாற்றுத்திறனாளியான திலீப்குமாரை தாக்கிவிட்டு, அவரது கடையின் கண்ணாடியை உடைத்துவிட்டு ரூ.4 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பிசியோதெரபிஸ்ட்டை தாக்கி 2 பவுன் நகை, இருசக்கர வாகனம் பறிப்பு
மேலப்பாளையத்தில் மருத்துவரைத் தாக்கி சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
நெல்லையில் இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் கைது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


