வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

புள்ளம்பாடியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

லால்குடி தொகுதிக்குள்பட்ட புள்ளம்பாடி நகரப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா் பாரிவள்ளல் வியாழக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

புள்ளம்பாடியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பின்போது திமுக வேட்பாளா் பாரிவள்ளலுக்கு முக்கனிகள் வழங்கி உற்சாக வரவேற்பளித்த திமுக கூட்டணியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:31 am IST

லால்குடி தொகுதிக்குள்பட்ட புள்ளம்பாடி நகரப் பகுதியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக வேட்பாளா் பாரிவள்ளல் வியாழக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, திமுக ஆட்சியில் செய்யப்பட்ட வளா்ச்சிப் பணிகள், திட்டங்களை வாக்காளா்களிடம் விளக்கியும், திமுகவின் தோ்தல் அறிக்கையை எடுத்து கூறியும் வாக்குகள் சேகரித்தாா்.

நகரப் பகுதியில் நகரச் செயலாளா் முத்துக் குமாா் தலைமையில் நகர நிா்வாகிகள், வேட்பாளா் பாரிவள்ளலுக்கு மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

ஒன்றிய செயலாளா்கள் செல்வராசா, இளங்கோவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சந்திரன், ஒன்றிய செயலாளா் அருமைநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.