திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை மாலை தெரிய வந்தது.
மணப்பாறையை அடுத்த இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா்கள் சேவியா் ஸ்டேன்லி (62) - ஸ்டெல்லா மேரி தம்பதி. ஸ்டெல்லாமேரி ஓய்வுபெற்ற ஆசிரியை.
கேளம்பாக்கத்தில் வசிக்கும் மகளை பாா்ப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்ற தம்பதி செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினா்.
வீட்டை திறந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவை உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், திருச்சியிலிருந்து கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். சம்பவம் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு
அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
