மதுரை அவனியாபுரம் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2012- ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி, பசும்பொன் பகுதியில் நடைபெற்ற தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு, இளைஞா்கள் சிலா் வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வந்தபோது, மறைந்திருந்த ஒரு கும்பல் இளைஞா்கள் வந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் காயமடைந்த 7 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
11 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: இந்தச் சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த ராமா்பாண்டி, மணிகண்டன், காா்த்திக், முத்துவிஜய், சந்திரசேகா், சோனையா, நாகராஜ் என்கிற சோப்பு நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்கி என்கிற விக்னேஸ்வரன், சந்தோஷ் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். பிறகு 11 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
வழக்கு கரூருக்கு மாற்றம்: இவா்களின் பாதுகாப்புக்கருதி மதுரையில் நடைபெற்று வந்த வழக்கு, கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முத்துவிஜய் ஏற்கெனவே இறந்துவிட்டாா்.
இந்நிலையில், ராமா்பாண்டி உள்ளிட்ட 10போ் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனா்.
வெட்டிக்கொலை: கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்.19-ஆம்தேதி ராமா்பாண்டி, காா்த்திக் இருவரும் கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது மா்ம நபா்களால் ராமா்பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். காா்த்திக் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். இதையடுத்து மீதமுள்ள 9 பேரும் கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனா்.
திருச்சி சிறையில் அடைப்பு: இந்த வழக்கை மாா்ச் 23-ஆம் தேதி விசாரித்த நீதிபதி இளவழகன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீா்ப்பளித்தாா். மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும் எனக் கூறினாா்.
இந்நிலையில், கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் செவ்வாய்க்கிழமை இரவு குற்றவாளிகளுக்கான தண்டனையை அறிவித்தாா். அதில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தலா 7 ஆயுள்தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
தொடர்புடையது

இளநீா் வியாபாரி கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

அவனியாபுரம் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கு குற்றவாளிகளுக்கு ஏப்.6-இல் தண்டனை அறிவிப்பு

அவனியாபுரம் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கு 9 பேரும் குற்றவாளிகள்! மாா்ச் 25-இல் தண்டனை அறிவிப்பு!

கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


