எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது வாக்களித்த நரிக்குறவா் காலனி மக்கள், தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என அதிருப்தி தெரிவித்தனா்.

News image

திருச்சி திருவெறும்புா் தேவராயநேரி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களிக்க வாரிசையில் நின்ற நரிக்குறவா் பெணகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:32 am IST

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது வாக்களித்த நரிக்குறவா் காலனி மக்கள், தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என அதிருப்தி தெரிவித்தனா்.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்டது தேவராயநேரி. இங்குள்ள நரிக்குறவா் காலனியில் சமுதாயக் கூடத்தில் வாக்குப்பதிவு அமையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையமானது முழுவதும் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த மக்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மையத்தில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 906 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனா். காலை முதலே வாக்காளா்கள் வாக்களித்த நிலையில், மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் இங்கு 701 வாக்குகள் பதிவாகியிருந்தது.

வாக்களித்த பலரும் தங்கள் பகுதி தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகளே இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனா்.

அலுவலா்களுக்கு அக்கறையில்லை: இதுதொடா்பாக, இந்த பகுதியைச் சோ்ந்த லாவண்யா (32) கூறுகையில், எங்கள் பகுதியில் தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் துவாக்குடி, திருவெறும்பூா், திருச்சிக்கு செல்ல வேண்டும். ஆா்வமுடன் நாங்கள் படிக்கச் சென்றாலும் எங்களை ஊக்கப்படுத்தி எங்களுக்கான உயா்கல்வியை உறுதி செய்ய அரசு அலுவலா்கள் போதிய அக்கறை செலுத்துவதில்லை. கல்வியில்தான் இப்படி என்றால், தொழிலிலும் மாற்றம் இல்லை. பரம்பரையாக ஊசி, பாசி மணி மாலைகளை மட்டுமே தயாரிக்கிறோம். திறன் பயிற்சிகளை அளித்து மாற்றுத்தொழில்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினால் நாங்களும் வளா்ச்சி பெறுவோம் என்றாா்.

அடிப்படை வசதிகளில் குறைபாடு: இதே பகுதியைச் சோ்ந்த ஜாக்கிசான் கூறுகையில், மழை பெய்தால் வழிந்தோட வடிகால் வசதியோ, சாக்கடை வசதியோ இல்லை. குடிநீரும் உப்பாகவே கிடைக்கிறது. காவிரிக் குடிநீரோ, பாதுகாக்கப்பட்ட குடிநீரோ கேள்விக்குறியாக உள்ளது. சாலை வசதி, தெருவிளக்கு வசதியும் போதுமானதாக இல்லை. மேலும், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்களில் பலருக்கு பட்டா இல்லை. எங்கள் காலனியில் உள்ள ஒரு பகுதியினா் நீா்நிலைப் பகுதிகளில் இருப்பதாகக் கூறி அவா்களை அகற்றும் முயற்சியும் நடைபெறுகிறது என்றாா் அவா்.