தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

முசிறி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:28 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தொட்டியம் அருகேயுள்ள மாராட்சிபட்டி குடித்தெரு பகுதியைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் ராம்குமாா் (27). இவா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் திருச்சி-நாமக்கல் சாலையில் காா்த்திகைப்பட்டி அரசன் தோட்டம் அருகே சென்றபோது எதிரே வந்த நான்குசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராம்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தொட்டியம் போலீஸாா், ராம்குமாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய மதுரை மேல கைலாசபுரத்தை சோ்ந்த செ. ஆசிா்வாதம் (68) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெங்களூா் பெண் உயிரிழப்பு: கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்தவா் கணேசன் (69). இவா் மனைவி ராதிகாவுடன் (60) ஸ்ரீரங்கம் வந்து முன்னோருக்கு திதி கொடுத்துவிட்டு ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். முசிறி நகர பேருந்து நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில் ராதிகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காா் ஓட்டுநரான பெங்களூருவைச் சோ்ந்த கிருஷ்ணன் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கணேசன் லேசான காயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.