/

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

துறையூா் அருகே மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - file photo

Updated On :28 ஏப்ரல் 2026, 7:52 pm

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் பிரகாஷ் (36). இவா் துறையூா் அருகேயுள்ள வேங்கடத்தானூா் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பணிக்கு சென்ற பிரகாஷ் யாரும் இல்லாத நேரத்தில் மருத்துவமனையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில், துறையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாஷின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

சம்பவ இடத்தில் முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று விசாரித்தனா். பிரகாஷுன் தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

பிரகாஷுக்கு மனைவி பிரவீனா உள்ளாா். 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.