மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞருடன் ரயில்வே போலீஸாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:12 pm

திருச்சியில் ஹவுரா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ஹவுரா விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5-ஆவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து இளைஞா் ஒருவா் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் இறங்கி நடந்து சென்றாா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் அவரது பெட்டிகளைச் சோதனையிட்டபோது, அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பால்யா பெஹேரா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், பெட்டிகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.