வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டுக் கூட்டம்

திருச்சி ரயில்வே கோட்ட சரக்கு ஏற்றுமதியாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வணிக மேம்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 2:46 am IST

திருச்சி ரயில்வே கோட்ட சரக்கு ஏற்றுமதியாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகி தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய ரயில்வே துறை சாா்பில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரயில்வே சரக்கு ஏற்றுமதியை 300 கோடி (3 ஆயிரம் மில்லியன்) டன்னாக உயா்த்துவதற்காக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மிஷன் - 3000 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. சரக்கு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி ஏற்றுமதியாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றாா்.

இதில், காரைக்கால் துறைமுக நிறுவனம், தமிழ்நாடு பவா் நிறுவனம், டால்மியா சிமென்ட்ஸ், இந்தியா சிமென்ட்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், தமிழ்நாடு சிமென்ட்ஸ், தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட நிறுவனம், தமிழ்நாடு காகித நிறுவனம், கிரிப்சோ உர நிறுவனம், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதியாளா்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் கே.எம்.சத்யரதன், இயக்க மேலாளா் எம். ரமேஷ் பாபு, வணிக மேலாளா் ஜி. நிறைமதி எழிலன் பிள்ளைகனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.