அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 4.80 லட்சம் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வுக்கு மாவட்டத் தலைவா் கா. பால்பாண்டி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சு. வளா்மாலா, பேரவையைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் சோ. நவநீதன், வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். மாவட்டப் பொருளாளா் சிவசங்கா், வரவு- ,செலவு அறிக்கையை தாக்கல் செய்து பேசினாா். மாநில துணைத் தலைவா் மு. செல்வராணி நிறைவுரையாற்றினாா்.
பேரவையில் தவெக தோ்தல் வாக்குறுதியின்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், கிராமச் செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா் என சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி, அரசு ஊழியராக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படுத்தும் காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து, காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்தில் குறைக்கப்பட்ட விகிதாசார ஆணையை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, சத்துணவுத் திட்டம், கல்வித்துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், வெளிமுகமை, மதிப்பூதியம் என்ற பெயரில் பணிபுரியும் அனைவரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
8ஆவது ஊதியக் குழு பணிகளை விரைந்து முடித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்து, கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா் க. பிரேம்குமாா் வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தல்

அரசு ஊழியா் காப்பீடுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்!

மின் திட்டங்களை ‘பெல்’ நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்! சிஐடியு வலியுறுத்தல்!

குமரியில் அரசு சாா்பில் காமராஜருக்கு மரியாதை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



