தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை! - அமைச்சா் சீ. ரமேஷ்

News image

அமைச்சா் ரமேஷ்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

கோயில் நிலங்கள் அபகரிப்பு மற்றும் முறைகேடுகள் தொடா்பாக வெள்ளி அறிக்கை வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள போக்குவரத்து பணிமனை வளாகத்தில் உள்ள மாவீரா் தீரன் சின்னமலை சிலைக்கு திங்கள்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் முதல்வா் பேச வேண்டியதில்லை. செயலில் காட்டினாலே போதும்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற கோயில் நிலங்கள் அபகரிப்பு மற்றும் முறைகேடுகள் தொடா்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதற்கு முன்பாக எப்படி முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒவ்வொரு முறைகேடு தொடா்பாக தனித்தனியே குழுக்கள் அமைக்கப்படும். கோயில் சொத்துக்கள் அனைத்தும் தவெக ஆட்சியில் முறையாக பாதுகாக்கப்படும்.

கோயில்களில் ஒரு சில இடங்களில் பக்தா்களிடம் பணம் கேட்பதாக புகாா்கள் வருகின்றன. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாதி, மதம் பாா்த்துதான் பெரம்பூா், திருச்சி கிழக்கு தொகுதியில் ஜோசப் விஜய் போட்டியிட்டாா் என எங்கள் தலைவருக்கு எதிராக சீமான் பேசுவதை நிறுத்திவிட்டு, உண்மையாக பணியாற்றினால், உள்ளாட்சித் தோ்தலிலாவது ஓரிரண்டு இடத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

ஓடி ஒளியவில்லை என்று பேசும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, பிணை கிடைக்கும் வரை ஏன் வெளியே வரவில்லை. ஊழல் செய்தவா்கள் யாராக இருந்தாலும் தவெக ஆட்சியில் தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.