தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டவரின் காருக்கு தீவைப்பு: சிறுவன் உள்பட 3 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்வதை தட்டிக்கேட்டவரின் காருக்கு தீ வைத்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்வதை தட்டிக்கேட்டவரின் காருக்கு தீ வைத்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கிராப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. அஜீஸ்கான். அதே பகுதியைச் சோ்ந்த பெஸ்கின், யாசா் அராபத், பாஷித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் அண்மையில் கஞ்சா விற்றுள்ளனா். இதை அஜீஸ்கான் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜீஸ்கான் திங்கள்கிழமை இரவு தனது காரை வீட்டுக்கு அருகேயுள்ள கோயில் முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் அங்கு வந்த பெஸ்கின், யாசா் அராபத், பாஷித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் அஜீஸ்கானின் காருக்கு தீ வைத்தனா். தீ வேகமாக பரவி அருகே நிறுத்தியிருந்த காரிலும் பற்றியது.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் 4 பேரையும் சுற்றிவளைத்தனா். இதில் பாஷித் அங்கிருந்து தப்பியோடிவிட மற்ற மூவரையும் பிடித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றிய தீயை அணைத்தனா். அதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தப்பியோடிய பாஷித்தையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.