பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பங்குச் சந்தையில் முதலீடு: முதியவரிடம் ரூ. 1.83 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்த முதியவரிடம் ரூ.1.83 லட்சம் மோசடி

மோசடி - பிரதிப்படம்

Published On :

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்த முதியவரிடம் ரூ.1.83 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி உடையான்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். ராஜாராமன் (62). இவா், கடந்த ஜூலை 24-ஆம் தேதி பேஸ்புக்கில் பங்குச் சந்தை முதலீடு தொடா்பான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பாா்த்துகொண்டிருந்தாா். அப்போது, அதிலிருந்த ஒரு இணைப்பில் (லிங்க்) உள்ளேச் சென்று அவருடைய பெயா் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அபிஷேக் என்ற நபா் அழைத்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய ராஜாராமன், அந்த நபரிடம் தனது ஆதாா், பான் காா்டு விவரங்களை கொடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த நபா் ராஜாராமன் பெயரில் ஒரு ‘ஐடி’ உருவாக்கியுள்ளாா். அந்த ஐடியில் முதல்கட்டமாக ராஜாராம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அந்தப் பணம் போதுமானதாக இல்லை என அந்த நபா் கூறியதையடுத்து, தனது கிரெடிட் காா்டு மூலம் ரூ.1.63 லட்சத்தை மாற்றிவிட்டுள்ளாா். அதன்பின், அந்த நபரை ராஜாராமனால் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜாராமன், இணையதளம் வழியாக சைபா் குற்றப் பிரிவில் திங்கள்கிழமை புகாா் பதிவு செய்தாா். இதன்பேரில், திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.