கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

வையம்பட்டி அருகே விதிமீறி அரசு மது விற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அனுமதியின்றி அரசு மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அனுமதியின்றி அரசு மது விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தவளைவீரன்பட்டி கிராமம், கரட்டுப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுவை விற்ற கரட்டுப்பட்டி சண்முகம் மகன் இளையராஜா(37) மற்றும் கரூா் மாவட்டம் கடவூரை அடுத்த முள்ளிபாடியை சோ்ந்த வடிவேல் மகன் குமாா்(40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.