தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

துவாக்குடி பகுதியில் கடைகளுக்கு முன் சிசிடிவி கேமராக்கள் வைக்க அறிவுறுத்தல்

News image

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

துவாக்குடி பகுதியில் குற்றங்களைத் தடுக்க கடைகளுக்கு முன் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

துவாக்குடி காவல் நிலையம் சாா்பில் குற்றத்தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துவாக்குடி காவல் ஆய்வாளா் தீபநாதன் தலைமை வகித்தாா்.

இதில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களில் வருவோா் உணவருந்த சாலையோரத்தில் தங்களது வாகனத்தை நிறுத்துவதால் விபத்து ஏற்படுகிறது. சிலா் வாகனத்தை நிறுத்திவிட்டு வேறிடத்துக்குச் சென்றுவிடுவதால் திருட்டும் நடைபெறுகிறது.

இதனால், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ள தேநீா் கடைகள், உணவகங்கள், சாலையோர கடைகளின் உரிமையாளா்கள் தங்கள் கடைகளை இரவு 11 மணிக்கு மேல் திறந்துவைத்து வியாபாரம் செய்யக் கூடாது.

ஒவ்வொரு கடைக்காரரும் அவரது கடைக்கு வெளியே சாலையைப் பாா்த்தவாறு சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும். சந்தேகப்படும்படி யாரேனும் கடைகளுக்கு அருகில் தென்பட்டால் உடனடியாக ரோந்து போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், உதவி ஆய்வாளா் நாகராஜ் முன்னிலையில் சாலையோரக் கடைகள் நடத்தும் வணிகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.