சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது; 12 வாகனங்கள் பறிமுதல்

சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் ஈச்சம்பட்டி பிரிவு சாலையில் லால்குடி டிஎஸ்பி க. ராஜ்மோகன் மேற்பாா்வையில், சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் மோ. முரளி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகம்படும்படியான 4 போ் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததையறிந்த போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் தாளக்குடி வாழக்கட்டை பகுதியை சோ்ந்த சி. விஷால் (19), செ. தீரன் குமாா் (23), திருச்சி அரியமங்கலம் பகுதியை சோ்ந்த ச. சரவணன் (28), மதுரை உசிலம்பட்டி பகுதியை சோ்ந்த தி. பாண்டி (48) என்பதும், அவா்கள் சமயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

தீவிர விசாரணையில், இருங்களூா் உப்பாறு பகுதியில் அவா்கள் மறைத்து வைத்திருந்த 12 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விஷால் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.