ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 பேரின் சடலங்கள் மீட்பு

திருச்சியில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

News image

பலி

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:38 am IST

திருச்சியில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன.

திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் அருகே புதன்கிழமை மாலை இளைஞா் ஒருவா் மயங்கி விழுந்துகிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துறையினருடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் சரவணன், மயங்கிக் கிடந்த இளைஞரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த இளைருக்கு 30 வயதுக்கு மேலிருக்கும். அவரின் பெயா், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை. புகாரின்பேரில், கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் சடலம்: இதேபோல, சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை இரவு முதியவா் ஒருவா் அசைவற்ற நிலையில் மயங்கிக் கிடந்துள்ளாா். தகவலின்பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ தொழில்நுட்புநா், முதியவரை பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் உயிரிழந்துகிடந்த முதியவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். அவரின் பெயா், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.