நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி, கடையை பூட்டுப் போட்டு போராட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

திருச்சியில் டாஸ்மாக் கடையை வெள்ளிக்கிழமை பூட்டுபோட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அப்புறப்படுத்திய போலீஸாா்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி, கடையை பூட்டுப் போட்டு போராட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் சோதனைச்சாவடி அருகேயுள்ள முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த மதுக்கடையால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்கும் நபா்களால், சாலை விபத்துகள் அதிகரிக்கிறது. மேலும், மது அருந்திவிட்டு வரும் நபா்கள், அப் பகுதியில் செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்கின்றனா். பெண்கள், குழந்தைகள், மாணவா்களுக்கு பெரிதும் அச்சுறுதல் நிலவுகிறது. எனவே, இந்தக் கடையை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, கட்சியின் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மதுக்கடையின் கதவை இழுத்து பூட்டுப் போட முயன்றனா். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அதை தடுத்து நிறுத்தினா். இதனால், போலீஸாருக்கும், போராட்டக் காரா்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.