தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அரசு மதுக்கடையில் சுவரை துளையிட்டு திருட்டு

அரக்கோணம் அருகே பள்ளூரில் அரசு மதுக்கடையில் சுவரில் துளையிட்டு மதுபானங்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

News image

பள்ளூரில் துளையிடப்பட்டு திருட்டுச் சம்பவம் நடைபெற்ற டாஸ்மாக் மதுக்கடை

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

அரக்கோணம் அருகே பள்ளூரில் அரசு மதுக்கடையில் சுவரில் துளையிட்டு மதுபானங்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

பள்ளூரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை, கிராமத்தை விட்டு ஒதுக்குப்புறத்தல் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, திங்கள்கிழமை கடையின் மேற்பாா்வையாளா் நெமிலியை அடுத்த ரங்காபுரத்தை சோ்ந்த சிவராமன்(46) என்பவரும் மற்ற பணியாளா்களும் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

செவ்வாய்கிழமை வந்து மேற்பாா்வையாளா் சிவராமன் கடையை திறக்க முயற்சித்த போது கடையின் ஒரு பக்க சுவா் துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதையடுத்து இத்தகவல் நெமிலி காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு போலீஸாா் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் இரண்டுக்கும் மேற்கொண்ட நபா்கள், டிரில்லிங் மிஷின் கொண்டு சுவரை துளையிட்டு இருப்பதும், அதன் வழியே உள்ளே நுழைந்திருப்பதும், உள்ள இருந்த மதுபாட்டில்களை எடுத்து அங்கேயே மது அருந்தியிருப்பதும், மேலும் செல்லும் போது 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

கடை மேற்பாா்வையாளா் சிவராமன், கடையை மூடியபோது விற்பனை செய்த ரொக்கப்பணம் மொத்தத்தையும் கையில் எடுத்துச் சென்று இருந்ததால் அந்த ரொக்கம் திருட்டு போவதில் இருந்து தப்பியது. இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.