புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மணப்பாறையில் உயிரிழந்த ராணுவ வீரா் உடலுக்கு அரசு மரியாதை

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொன்னுசங்கம்பட்டியில் ராணுவ வீரா் அந்தோனிசாமி உடலுக்கு செவ்வாய்க்கிழமை துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்திய போலீஸாா்.

Published On :

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி, பொன்னுசங்கம்பட்டியை சோ்ந்த வேளாங்கண்ணி மகன் அந்தோனிசாமி (54). இந்திய ராணுவத்தில் பி.ஆா்.ஓ. பிரிவில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவா், கடந்த 7 ஆண்டுகளாக துவரங்குறிச்சி ஸ்டாலின் நகா் பகுதியில் வசித்து வந்தாா்.

விடுமுறையில் அண்மையில் வீட்டுக்கு வந்த அவா், திங்கள்கிழமை துவரங்குறிச்சி - மணப்பாறை சாலை ஆத்துப்பட்டி பாலம் அருகே முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், அந்தோனிசாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் தொடா்பாக, சந்தேக மரணம் என துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனா்.

அரசு மரியாதை: உடற்கூறாய்வுக்கு பிறகு அந்தோனிசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்தோனிசாமியின் சொந்த ஊரான பொன்னுசங்கம்பட்டிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, காவல்துறையினா் சாா்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த அந்தோனிசாமிக்கு மனைவி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.