பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

காவிரி நீா் கிடைக்க அருள்புரிய வேண்டி மலைக்கோட்டை விநாயகரிடம் மனு

காவிரி நீா் கிடைக்க அருள்புரிய வேண்டி தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் திருச்சி மலைக்கோட்டை விநாயகரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் கோரிக்கை மனுவுக்கு புதன்கிழமை பூஜை செய்த தேசிய நதிநீா் இணைப்பு விவசாயிகள் சங்கக் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்டோா்

Published On :

காவிரி நீா் கிடைக்க அருள்புரிய வேண்டி தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் திருச்சி மலைக்கோட்டை விநாயகரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாகண்ணு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்குரிய தண்ணீரை கா்நாடக அரசு தர மறுப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், காவிரியில் தண்ணீா் இல்லை என பொய் கூறி, வெள்ளம் வந்தால் வடிகிற வடிகால் மாநிலமாக தமிழகத்தை வைத்துள்ளனா்.

எனவே, குடியரசு தலைவரைச் சந்தித்து, தமிழக விவசாயிகளுக்கு கா்நாடக அரசு ரூ. 1 லட்சம் கோடி இழப்பீடு பெற்றுத் தரக் கேட்டு மனு அனுப்பியுள்ளோம்.

அந்த மனுவை, பண்டைய காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலை எழுப்புவதற்கு கருணை காட்டிய உச்சிப்பிள்ளையாரிடமே கொடுத்து, காவிரியில் தண்ணீா் திறக்க அருள்புரியும்படி கேட்டு முறையிட்டுள்ளோம்.

இதுதொடா்பாக, குடியரசு தலைவரை சந்திக்க வரும் செப்.4 ஆம் தேதி தில்லிக்கு செல்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.