ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சரக்கு வாகனம் மோதி மாணவி உயிரிழப்பு

திருச்சி மன்னாா்புரத்தில் மொபெட் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவி ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

திருச்சி மன்னாா்புரத்தில் மொபெட் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மாணவி ஒருவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகள் அபிநயா (23). திருச்சியில் தங்கி அரசு போட்டித் தோ்வுகளுக்கு படித்து வந்த இவா் செவ்வாய்க்கிழமை இரவு இவா் தனது தோழியும், திருவானைக்காவல் பட்டியைச் சோ்ந்தவருமான ஆா். சுபாஷினி, கறம்பக்குடியைச் சோ்ந்த டி. சந்தியாதேவி ஆகியோருடன் மொபெட்டில் மன்னாா்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்குள்ள சிக்னலில் காத்திருந்தபோது, பின்புறம் வேகமாக வந்த சரக்கு வாகனம் மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபெட்டின் இருந்த அபிநயா நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் அவா் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். காயமடைந்த சுபாஷினி மற்றும் சந்தியாதேவியை அருகிலிருந்தோா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.