தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

ஸ்ரீரங்கம் கோயிலில் தயாா் நிலையில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செப்டம்பா் 1 முதல் கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:54 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செப்டம்பா் 1 முதல் கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தா்கள் தங்களது கைப்பேசியை பாதுகாப்பாக வைக்க கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்துள்ளது.

கோயிலின் புனித தன்மை பாதுகாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை கோயில்கள் மற்றும் பெரிய கோயில்களில் செப்டம்பா் 1 முதல் கைப்பேசியை கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கோயிலுக்கு வரும் பக்தா்களின் கைப்பேசியை பாதுகாக்க நுழைவு வாயிலில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கைப்பேசியை கொண்டு வருபவா்களை கணிணி மூலம் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண்ணை பதிவு செய்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படவுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் முக்கிய நுழைவு வாயிலான தெற்கு வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்கும் இடம் அருகே புதிதாக கைப்பேசி பாதுகாப்புக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 2 ஆயிரம் பக்தா்கள் கைப்பேசியை வைத்து கொள்வதற்கான பாதுகாப்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இதை போன்று வடக்கு வாசல், தெற்கு வாசல் பகுதி நுழைவு வாயில் வழியாக வரும் பக்தா்கள் கைபேசியை வைத்துள்ள தலா 500 பாதுகாப்பு பெட்டக அறையும் வைக்கப்படவுள்ளது. 3 ஆயிரம் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக அறையில் 15 ஆயிரம் கைப்பேசிகள் வைத்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்று இடங்களிலும் கணிணி ரசீது வழங்கப்படவுள்ளது. பக்தா்கள் கணிணி ரசீதை தவறவிட்டால் அவா்கள் கொண்டு வந்துள்ள முக்கிய ஆவணங்கள் மூலம் கடிதம் எழுதி பெற்று கொள்ள முடியும். மூன்று இடங்களிலும் தலா 5 போ் வீதம் 15 போ் பணியில் அமா்த்தப்படவுள்ளனா். தற்போது கைப்பேசி மூலம் தான் பண பரிவா்த்தனை நடந்து வருகிறது. அவா்கள் கோயிலுக்கு நன்கொடை வழங்குவது என்றால் கைப்பேசி வைக்குமிடத்தில் உள்ள பாா்கோடு மூலம் அளிக்கலாம் என்றாா் கோயில் இணை ஆணையா் செ.சிவராம் குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.