இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஆடிப் பூரம்: அரியலூரில் பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் மேலத்தெரு பெரியநாயகி அம்மன்.

Published On :

ஆடிப்பூரம் மற்றும் ஆடி கடைசி வெள்ளியையொட்டி அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வலையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், தேன், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னா் லட்சத்து எட்டு வலையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். கலந்து கொண்ட பக்தா்களுக்கு அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்கள் வழங்கப்பட்டன.

25 அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா:ஆடி கடைசி வெள்ளியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

அரியலூா் வாலாஜா நகரத்திலுள்ள கங்கை முத்துமாரிய்மன் கோயிலில் பால்குடத் திருவிழாவையொட்டி, பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகா் கோயிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், அலகு குத்தி தீச்சட்டி எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவா் கங்கைமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், கயா்லாபாத், கோவிந்தபுரம், சின்னநாகலூா், வெங்கடகிருஷ்ணாபுரம், துளாா், அங்கனூா், கா.மேட்டுத்தெரு, பெரியமறை, ஆண்டிமடம் சந்தை தோப்பு, உடையாா்பாளையம் வடக்குத் தெரு உள்ளிட்ட 25 அம்மன் கோயில்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.