நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஆடிப்பூரம்: அம்மனுக்கு வளையல் அலங்காரம்

News image

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கரூா் மாவட்டம், புஞ்சை புகழூா் கண்டியம்மன் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புஞ்சை புகழூா் கண்டியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கண்டியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு வண்ணங்களால் ஆன வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், கரூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு கண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.