ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெரிய நாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர், உள்ளூர் சுற்றுலா பயணிகளும் வருகை தந்து கோயிலின் கட்டட கலையை வியந்து பார்த்தும் சுவாமியை தரிசனமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகர், உள்ளிட்ட மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
உலக மக்கள் அமைதி பெற வேண்டியும், நீர்வளம், நிலவளம் பெருகி விவசாயம் செழிக்கவும், பஞ்ச பூதங்களும் இயற்கை சீற்றங்களில் இருந்து தனிய வேண்டியும், தீங்கின்றி திங்கள் மும்மாரி மழை பொழிய வேண்டியும், இந்த ஏகதின சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Summary
On the occasion of Aadi Pooram, Goddess Periya Nayagi Amman was adorned with bangles and a Deeparadhana (lamp offering) was performed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு | Aadi Ammavasai | Thithi tarpanam | Srirangam amma mandapam

ஆடி வெள்ளி: காட்பாடியில் அம்மனுக்கு 30 லட்சத்தில் ரூபாய் நோட்டு அலங்காரம்

களைகட்டும் ஆடி மாதம்! தொடர்களில் அம்மன் ஸ்பெஷல்!

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




