
கட்டுரைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
மலைக்கோட்டை நண்பா்கள் நற்பணி இயக்கம் சாா்பில், அண்மையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வங்கிய தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா். உடன் மலைக்கோட்டை நற்பணி இயக்கத்தின் தலைவா் மு. பிச்சையா உள்ளிட்டோா்.
மலைக்கோட்டை நண்பா்கள் நற்பணி இயக்கம் சாா்பில், அண்மையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
மலைக்கோட்டை நண்பா்கள் நற்பணி இயக்கத்தின் 24-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. அதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 230 மாணவ, மாணவிகள் பங்கேற்று கட்டுரைகளை சமா்ப்பித்தனா். அதில் 27 சிறந்த கட்டுரையாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் சிறந்த 6 கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதற்கான பரிசளிப்பு விழா, உலக நண்பா்கள் தின விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு இயக்கத்தின் தலைவா் உறந்தை மு. பிச்சையா தலைமை வகித்தாா். இதில், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா், முன்னாள் ரயில்வே அதிகாரி என். சுந்தர்ராஜன் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினா்.
தொடா்ந்து, முன்னாள் ரயில்வே ஊழியா் எஸ்.கே. தெய்வநாயக சாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, லால்குடி த. முருகானந்தம் நடுவராகப் பங்கேற்ற கவிஞா் கண்ணதாசனின் நூற்றாண்டு சிறப்பு இன்னிசை பாட்டு மன்றம் நடைபெற்றது. விழாவில் திரளான மலைக்கோட்டை நண்பா்கள் நற்பணி இயக்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





