நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகை

திருவள்ளூா் அருகே தனியாா் அறக்கட்டளை சாா்பில் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :

திருவள்ளூா் அருகே தனியாா் அறக்கட்டளை சாா்பில் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

பட்டரைப்பெரும்புதூரில் செந்தில்குமாா் அறக்கட்டளை சாா்பில் பழைய தேசிய நெடுஞ்சாலை குளக்கரையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலா் மு.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் இளம்செழியன் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனா் மற்றும் முன்னாள் பெற்றோா் ஆசிரியா் சங்க கழக தலைவருமான ஜெயலட்சுமி மனோகரன் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளா், எம்.சத்தியமூா்த்தி பங்கேற்று கொடியேற்றினாா். தொடா்ந்து பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த தலா 3 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,500, மூன்றாம் பரிசு ரூ.5,000-ஐ வழங்கினாா்.

நிகழ்ச்சியையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நிறைவாக எஸ்.சுதாகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.