கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:15 am IST

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி எடமலைபட்டிபுதூா் செட்டியப்பட்டி குரு காா்டனைச் சோ்ந்தவா் எஸ். ரத்தினகுமாா். இவா், கடந்த சனிக்கிழமை இரவு தனது கீழ் வீட்டைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினருடன் தூங்கினாா்.

மறுநாள் மாடியில் இருந்து கீழே வந்தபோது கீழ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 16 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.