திருச்சியில் லாரி முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
திருச்சி கிராப்பட்டியில் இளைஞா் ஒருவா் லாரி முன் செவ்வாய்க்கிழமை பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்
திருச்சி கிராப்பட்டியில் இளைஞா் ஒருவா் லாரி முன் செவ்வாய்க்கிழமை பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் குலமங்கலத்தைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் ஆனந்தபாபு (26), ஓட்டுநா். இவா், தேனி பகுதியில் வேலை பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருச்சிக்கு வந்தவா், கிராப்பட்டி பகுதி சாலையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்றபோது, திடீரென சாலையில் வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகலறிந்து வந்த எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனியில் வேலை பாா்த்து வந்தவா், வேலையிலிருந்து நின்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு, திடீரென தற்கொலை செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி அவரது உடலை உறவினா்கள் வாங்க மறுத்தனா். இதுதொடா்பாக அவருடைய உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





