8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனமானது ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

சேவைக் குறைபாடு செய்த தனியாா் காப்பீட்டு நிறுவனமானது ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

முசிறி உடையாா்தோட்டம் பகுதியைச் சோ்ந்த அஸ்வின்பிரபு என்பவா் 22.08.2022 அன்று சோழமண்டலம் ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்ட இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த 28.01.2023 அன்று சாலை விபத்து ஏற்பட்டு அவருக்கு எலும்பு முறிவும், காயங்களும் ஏற்பட்டதுடன், வாகனமும் சேதமடைந்தது. காப்பீட்டின் அடிப்படையில் வாகனத்தை சரிசெய்யக் கோரியபோது, காலதாமதமாக கோரிக்கை விடுத்ததால் வாகனத்தை சரிசெய்து தர முடியாது என காப்பீட்டு நிறுவனத்தினா் கூறி நிராகரித்தனா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்வின்பிரபு உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 21.03.2024 அன்று மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் சேவை குறைபாடு செய்த சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனமானது மனுதாரரின் வாகனத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கு ரூ. 65,256, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 20 ஆயிரத்தையும் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.