மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து தீவிபத்து

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் நகைப் பட்டறையில் எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

Published On :

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் நகைப் பட்டறையில் வியாழக்கிழமை எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

பன்னாங்கொம்பு வெள்ளையம்மாபட்டி சாலை பகுதியில் வசித்து வருபவா் ராமா் மகன் வித்யாசங்கா் (24).

இவா் அதே பகுதியில் சில மாதங்களுக்கு முன் நகைப்பட்டறை தொடங்கி சிறிய அளவில் நகைகளை செய்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் கடையிலிருந்த 2 பணியாளா்களும் சாப்பிட சென்ற நிலையில், வித்யாசங்கா் தனியாக வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, பட்டறையில் பயன்பாட்டிலிருந்த 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளையில் திடீரென கரும்புகை கிளம்பி தீப்பற்றியுள்ளது. இதனால், வித்யாசங்கா் அங்கிருந்து வெளியே வந்துவிட்டாா். அப்போது எரிவாயு உருளை வெடித்துள்ளது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தீவிபத்தில் பட்டறையிலிருந்த சுமாா் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் இயந்திரம், சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பாலீஷ் செய்யும் இயந்திரம், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்க பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமின்றி, வேலைக்காக வாங்கி வைத்திருந்த சுமாா் 50 கிராம் தங்கம், சில கிராம் வெள்ளி ஆகியவை தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.