டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்து காயமடைந்த மேலும் 2 போ் உயிரிழப்பு

News image

காசிநாதன்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:33 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே விவசாய கூலித் தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

திருவோணம் அருகே உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் ஜூலை 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

அப்போது ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த வீரையன் மகன்கள் காசிநாதன் (37), வேம்பையன் (47), எஸ். ராஜசேகா் (45), அப்புராஜ் மகன் பழனிவேல் (37), வேம்பையனின் மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் பழனிவேல் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனிடையே, சகோதரா்களான காசிநாதன் சனிக்கிழமை நள்ளிரவும், வேம்பையன் ஞாயிற்றுக்கிழமை காலையும் உயிரிழந்தனா். இதனால் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது. மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அமைச்சா் அஞ்சலி செலுத்தினாா்:

இந்நிலையில், உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

மேலும், சிகிச்சை பெறுபவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்தாா்.

வேம்பையன்

வேம்பையன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.