உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

திருவானைக்காவலில் பள்ளி வேன் மோதி தந்தை, மகன் படுகாயம்!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் பள்ளி அருகே பள்ளி வேன் வெள்ளிக்கிழமை மோதி தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் பள்ளி அருகே பள்ளி வேன் வெள்ளிக்கிழமை மோதி தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் விஜய் ஆனந்த் (44). இவா் தனது மகன் அபினவ் (9) என்பவரை திருவானைக்காவல் பெரியாா் நகா் பகுதியில் இருக்கும் பள்ளிக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றாா்.

அப்போது அங்கு வந்த பள்ளி வேன் மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அருகிலிருந்த தனியாா் மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் பள்ளி வேனை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் சாய்ராம் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.