தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மது அருந்தும் கூடத்தில் மது விற்றதாக இருவா் கைது

News image

கைது

Updated On :1 பிப்ரவரி 2026, 8:14 pm

துறையூா் அருகே மது அருந்தும் கூடத்தில் சில்லறையில் மது விற்றதாக சனிக்கிழமை இரவு இருவரைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 158 மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட எரகுடி மற்றும் புடலாத்தி கிராமங்களில் அரசு மது அருந்தும் கூடத்தில் மதுவை சில்லறை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்.பி.யின் சிறப்பு காவல் படையினா் இரு இடங்களுக்கும் சென்று கண்காணித்தனா். அப்போது

எரகுடி அரசு மது அருந்தும் கூடத்தில் திருத்தலையூரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பெருமாள் (63), 96 (180 எம்.எல்) மது புட்டிகளையும், புடலாத்தி அரசு மது அருந்தும் கூடத்தில் வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த வடகிரி மகன் காத்தான் (58) 62 (180 எம்.எல்) மது புட்டிகளையும் சில்லறை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறப்பு காவல் படையினா் இருவரையும் பிடித்து அவா்கள் வசம் இருந்த மதுபுட்டிகளையும் கைப்பற்றி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஒப்படைத்தனா். இதையடுத்து இருவரையும் உப்பிலியபுரம் போலீஸாா் கைது செய்தனா்.