மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியில் 130-ஆவது நிறுவன நாள் விழா

News image

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பாராட்டப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஸ்ரீரங்கம் கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகள்.

Updated On :6 பிப்ரவரி 2026, 10:10 pm

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 130-ஆவது நிறுவன நாள் விழா, ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கல்வி அறக்கட்டளையின் சாா்பில் இயங்கும் பள்ளிகளின் நிா்வாகக் குழு சாா்பில் நடத்தப்படும் நிறுவன நாள் விழாவும், 25 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கான பாராட்டு விழாவும் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பள்ளியின் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் எம்.எஸ். நந்தகுமாா் தலைமை வகித்தாா். செயலா் என். கஸ்தூரி ரங்கன் முன்னிலை வகித்தாா். பெங்களூரைச் சோ்ந்த தொழில்முனைவோா் ரங்கராஜன் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினாா். பள்ளியின் முன்னாள் மாணவி கீதா ரங்கராஜனும் பரிசுகளை வழங்கினாா். விழாவில், 25 ஆண்டுகள் பணி முடித்த 8 ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

இதேபோல, தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) என். செந்தில்நாதனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், அறக்கட்டளை நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். வரதராசன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினரை நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. குமாா் அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகக் குழு உறுப்பினா் சி. செல்வராஜ் விளக்கிப் பேசினாா். அறக்கட்டளை பொருளாளா் வி.எஸ். கிரி நன்றி கூறினாா்.

இந்த விழாவில், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவானைக்காவல் உயா்நிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளி, அரங்கநாயகி தொடக்கப் பள்ளி, கலைவாணி மெட்ரி பள்ளிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.