மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவெறும்பூரில் சமுதாய வளைகாப்பு விழா

News image

திருவெறும்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:45 pm

திருவெறும்பூா் எழில் நகா் ஓய்வுபெற்ற பெல் ஊழியா்கள் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், திருவெறும்பூரில்

120 கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, மங்கலப் பொருள்களான வளையல், மங்கல நாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம், வேப்பங்காப்பு, மாலை, கா்ப்பக்கால வழிமுறைகள் குறித்த கையேடு, 5 வகையான கலவை சாதமும் வழங்கப்பட்டது.

விழாவைத் தொடங்கி வைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

சமுதாயத்தின் மருத்துவராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த விழாவை நடத்துகிறாா். கருவுற்ற பெண்கள் மனதாலும், உடலாலும் நலமுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை சமுதாயத்துக்கு வழங்க சத்துள்ள உணவை உண்ண வேண்டும். குழந்தையின் ஒவ்வொரு வளா்ச்சிக்கும் நானும், இந்த அரசும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

முன்னதாக நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, ஜனனி மகேஸ் பொய்யாமொழி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் மா. நித்யா, வட்டாரக் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கீழகுமரேசபுரத்தில் ரூ. 9.85 லட்சத்தில் திருவெறும்பூா் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை அமைச்சா் திறந்து வைத்தாா்.