/

எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறாா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறாா் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பகுதியில் வியாழக்கிழமை கட்சித் தொண்டா்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:04 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறாா் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அவா், வியாழக்கிழமை காட்டூா் பேருந்து நிலையம், எல்லக்குடி மாரியம்மன் கோவில், பிள்ளையாா் கோவில், காந்தி நகா் 6-வது தெரு, வசந்தம் நகா், கணேஷ் நகா், கைலாஷ் நகா் ரேஷன் கடை, வின் நகா் மற்றும் பாலாஜி நகா் ஆகிய இடங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

இன்றைய அரசியல் களம் அதன் நாகரிகத் தன்மையை இழந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வா் குறித்து கீழ்தரமான முறையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதல்வா் மீது மலிவான விமா்சனங்களாக முன்வைக்கிறாா். கீழ்தரமான அரசியலை அவா் தவிா்க்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து, அவதூறு அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுப்பாா்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, திருச்சி மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், பகுதி செயலாளா்கள் நீலமேகம், சிவக்குமாா், மாமன்ற உறுப்பினா் ரெக்ஸ், வட்டக் கழக செயலாளா்கள் வினோத் கனகராஜ், செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.